தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை ஷெரின்.
அடுத்தடுத்த இவர் விசில்,உற்சாகம் மற்றும் பீமா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவரின் உடல் எடை தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.
அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த விஜய் டிவி பிரபலமாக்கியது.
அதன் பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன ஷெரின் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தனது ரசிகர்களுக்காகவே தினம் தோறும் பல விதமான புகைப்படங்களை ஷெரின் பதிவிட்டு வருகிறார்.
அவ்வகையில் தற்போது பாவாடை தாவணியில் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.