LATEST NEWS
திரிஷாக்கு அடிச்ச ஜாக்பாட்….! விஜய், அஜித், கமல் வரிசையில் பிரபல நடிகருக்கு ஜோடி…. 1000 கோடி கன்பார்ம்…!!!

சினிமாவில் 20 ஆண்டுகாலமாக பிரபல நடிகையாக இருப்பது என்பது மிகவும் சாதாரணமான விஷயம் கிடையாது. அதை எல்லாம் தாண்டி சாதித்து இருக்கின்றார் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் அனைத்து மொழிகளிலும் ஹீரோயினியாக நடிக்க தொடங்கினார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்து சூப்பர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.

#image_title
தற்போது வரை ரசிகர்கள் விரும்பும் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை திரிஷா. தொடர்ந்து பிஸியாக இருந்த திரிஷா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்தான். அந்த திரைப்படத்திற்கு பிறகு டாப்புக்கு சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.

#image_title
அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. 14 ஆண்டுகளுக்கு பிறகு லியோ திரைப்படத்தின் மூலமாக விஜயுடன் ரீஎன்டரி கொடுத்தார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்த வருகின்றார். அதை தொடர்ந்து கமலின் தக் லைப் திரைப்படத்திலும் இவர் தான் ஹீரோயினி என்று கூறப்பட்டு வருகின்றது.

#image_title
இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது தெலுங்கிலும் வளம் பெறத் தொடங்கி இருக்கின்றார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அட்லி அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு திரிஷா தான் ஜோடியாக நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.