CINEMA
கணவர் மற்றும் மகளுடன் விடுமுறையை கொண்டாட ஜாலியாக அவுட்டிங் சென்ற நடிகை விஜயலட்சுமி.. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி.
இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம், கசடதபர, உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார்.
இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திடீரென தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஃபேரோஸ் முஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே குணச்சித்திர வேடத்தில் தலைகாட்டிய இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் கதாநாயகியாக மாறினார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது வார விடுமுறையை கொண்டாடுவதற்கு தனது கணவர் மற்றும் மகளுடன் ஜாலியாக அவுட்டிங் சென்றுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை விஜயலட்சுமி பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.