பளபளக்கும் மேனி, சற்றும் குறையாத இளமை… முதல்முறையாக அழகு ரகசியம் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த தமன்னா..!! - Cinefeeds
Connect with us

CINEMA

பளபளக்கும் மேனி, சற்றும் குறையாத இளமை… முதல்முறையாக அழகு ரகசியம் குறித்த சீக்ரெட்டை பகிர்ந்த தமன்னா..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது. சினிமாவிற்கு வந்து 18 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாகவே தமன்னா இருந்து வருகின்றார்.

இந்நிலையில் தன்னுடைய இளமை ரகசியம் குறித்து தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், கிளாமர் உலகில் பிட்னஸ் உடன் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உணவு பழக்கங்களும் முக்கியம். தினமும் காலை சிற்றுண்டியாக நட்ஸ், பேரிச்சம்பழம், சரி மற்றும் வாழைப்பழத்தை சம பங்காக எடுத்துக்கொண்டு சாப்பிடுகிறேன். மதிய உணவாக பிரவுன் ரைஸ், பருப்பு மற்றும் காய்கறிகள்.

தினந்தோறும் மாலை 5.30 மணிக்கு எல்லாம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை 6 மணி வரை எதுவுமே சாப்பிட மாட்டேன். தினமும் 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறேன். இதனால் சருமம் பளபளப்பாக பளிச்சுன்னு இருக்கும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ மற்றும் ஆம்லா ஜூஸ் என அனைத்தையும் என்னுடைய ஆரோக்கிய ரகசியத்தில் ஒரு பங்காக வைத்துள்ளேன் என்ற தமன்னா வெளிப்படையாக கூறியுள்ளார்.