தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன்.இவர் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார். தனது 16 வயதில் நடிகையாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கும்கி, குட்டி புலி மற்றும் பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

மேலும் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை,கொம்பன் மற்றும் வேதாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் இவர் நடித்த மிருதன் மற்றும் ரெக்க போன்ற திரைப்படங்களில்மார்க்கெட் குறைய தொடங்கியதால் படிப்பில் கவனம் செலுத்த சினிமாவில் இருந்து விலகினார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகம் படத்தில் லஷ்மி மேனன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலு, கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார் மற்றும் மகிமா நம்பியார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை லட்சுமிமேனன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் த்ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.