CINEMA
என்னை விட வயதில் சின்ன பையன்…. விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா..??

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் ஹீரோயினாக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தில் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். அதன்பிறகு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் விஜய்யுடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க பேசப்பட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை ஐஸ்வர்யா மருத்துள்ளார். இதற்கான காரணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது தமிழன் படத்திற்காக பட குழுவினர் ஐஸ்வர்யா ராயை அணுகியுள்ளனர். ஆனால் அவர் விஜய்யுடன் நடிக்க மாட்டேன். அவர் என்னை விட வயதில் சின்ன பையன். அதனால் எங்களுக்கு ஜோடி பொருத்தம் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டதாக அந்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.