தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த நிகழ்ச்சி இவரது புகழை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்றது.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.அதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். தற்போது பொய்க்கால் குதிரை மற்றும் காபி வித் காதல், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இவருக்கு ஆனந்த விகடன் சினிமா விருதுகள், எடிசன் விருதுகள் மற்றும் எட்டாவது சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோ சூட் வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/worldofqueens1/status/1640706764630028290