LATEST NEWS
விஜயின் படத்தை தவறவிட்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.. பிரபல தயாரிப்பு நிறுவனம் தான் அதுக்கு காரணம்.. அந்த சூப்பர் ஹிட் படம் மிஸ் ஆகிருச்சே..!!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. ஏ.ஆர் முருகதாஸ் எஸ் ஜே சூர்யாவிடம் வாலி, குஷி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இதனையடுத்து விஜயகாந்தை வைத்து ரமணா திரைப்படத்தை இயக்கினார்.
ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார். மேலும் ஹிந்தியில் அவர் இயக்கிய கஜினி படமும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து விஜயுடன் துப்பாக்கி, கத்தி, ரஜினியுடன் தர்பார் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் ஆகிய படங்களை முருகதாஸ் இயக்கினார்.
ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் மக்களுடைய வரவேற்பை வரவில்லை. அந்த சமயம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஏ.ஆர் முருகதாஸுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தர்பார் படத்தையும் இயக்கி வந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் முருகதாஸுக்கு குறைவான சம்பளத்தை பேசியுள்ளனர்.
இதனால் ஏ.ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் உலா வந்தது அப்படி இருக்க ஏ.ஆர் முருகதாஸ் தவறவிட்ட படம் அதுவாக தான் இருக்கும் என் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.