LATEST NEWS
பிக்பாஸ் நண்பர்களை நேரில் சந்தித்த அசீம்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிரபலம்… வைரலாகும் புகைப்படங்கள்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அதில் இறுதியாக அசீம் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு வாகை சூடினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பரிசு தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் அசீம் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் மக்களின் ஆதரவு இவருக்கு அமோகமாக இருந்த நிலையில் இறுதியாக அவரே வெற்றி பெற்றார்.
இவரின் வெற்றியை ரசிகர்கள் பலரும் வெளியில் இருந்து கொண்டாடினர். அசீம் பல சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் இவரின் மனைவியை சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தனது மகனுடன் சந்தித்து அழகிய புகைப்படங்களை இவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அசீம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிக் பாஸ் நண்பர்களை நேரில் சந்தித்துள்ளார்.
சமீபத்தில் அசீம் தனது மகன் ஆர்யனின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்போது பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் ஒன்று கூடினர்.
அது தொடர்பான புகைப்படங்களை அசீம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.