LATEST NEWS
54 வயதில் 23 வயது நடிகையின் காதல் வலையில் சிக்கிய எஸ்.ஜே சூர்யா?…. அது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்த இவர் பாக்கியராஜ் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய இவர் படிப்படியாக சினிமாவின் உச்சத்தை தொட்டார். ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் வில்லனாகவும் பல்வேறு படங்களில் அசத்தியுள்ளார்.
அதன்படி இவர் வில்லனாக நடித்த மெர்சல்,மாநாடு மற்றும் டான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவருக்கு சினிமாவில் சில நடிகைகளுடன் காதல் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளியாகி வந்தாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான கடமை செய்கின்ற திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். படம் ரிலீசுக்கு பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் கிசுகிசுக்கப்படுகின்றன. தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கடற்கரையில் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.