LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?…. அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது 42 வயதாகியும் இளமையுடன் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.இவருக்கு விவாகரத்தாகி ஒரு மகன் உள்ள நிலையில் அவரின் மகன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.