LATEST NEWS
1 இல்ல 2 இல்ல… இத்தனை லட்சமா…? பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விசித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் சீசன் 7 இளம் போட்டியாளர்களுக்கு மத்தியில் விசித்ரா சிறப்பாக விளையாடினார். அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை பெறுவார் என ஏராளமானோர் எதிர்பார்த்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராதவகையில் விசித்ரா பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். சுமார் 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த விசித்திராவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் அங்கு இருக்க குறிப்பிட்ட சம்பளம் பேசப்பட்டது.
அதன் படி விசித்ராவுக்கு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதன்படி விசித்ரா 35 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.