LATEST NEWS
பிக் பாஸ் சீசன் 6….! முதலாவதாக வெளியேறப் போகும் 2 போட்டியாளர்கள்….. காரணம் இதுதான்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ஏற்கனவே கடந்த ஐந்து சீசன்களையும் வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் துவங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த சீசனங்களில் இல்லாத அளவிற்கு தற்போது 20 போட்டியாளர்களை களத்தில் இறக்கியுள்ளது பிக் பாஸ். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே டாஸ்க் லஞ்சூரி பட்ஜெட், கிளப் ஹவுஸ் என்று அதிரடி காட்டிய பிக் பாஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாக சென்ற நிகழ்ச்சி தற்போது சண்டை, பிரச்சனை என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது. இந்த வாரம் நாமினேட் செய்பவர்கள் அடுத்த வாரம் வெளியேறுவார்கள். அந்த வகையில் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காமல் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்து ரவுடி பேபியாக வளம் வந்த நடிகை ஆயிஷா மூச்சு திணறல் காரணமாக பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து தாமாகவே வெளியேறியுள்ளார்.
அதை தொடர்ந்து பத்திரிகையாளர் விக்ரமன் இரண்டாவது ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.