LATEST NEWS
காதலரை அறிமுகம் செய்யப் போகும் பிக்பாஸ் ஆயிஷா…. கட்டிப்பிடித்து அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஆயிஷா. இவர் முதல் முதலாக பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் அறிமுகமான நிலையில் அந்த சீரியலில் இயக்குனருடன் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார். அதனைத் தொடர்ந்து மாயா சீரியலில் நடித்த இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.
இதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் அண்மையில் முடிந்த பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் கலந்து கொண்டார். இந்நிலையில் ஆயிஷா தற்போது ஒரு ஆண் நபரை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் ஆயிஷாவின் திருமணம் குறித்து தொலைக்காட்சிகளுக்கு விரைவில் அறிவிப்பார் என்று கூறி வருகிறார்கள். இது கட்டாயம் அவர் காதலருடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் தான் என்றும் கூறி வருகிறார்கள்.