LATEST NEWS
இரவு பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும்…. புகைப்படத்தை வெளியிட்ட விஜே மகேஸ்வரி…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வருபவர் விஜே மகேஸ்வரி. இவர் முதலில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி சப்போர்ட் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார். ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு முன்னதாக ஷெரினா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இரவு பார்ட்டியில் செரீனாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை மகேஸ்வரி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க