CRIME
“அய்யயோ.. விளையாடிக் கொண்டிருந்தபோது வந்த எமன்.. இரண்டு குழந்தைகள் மீது கார் ஏறிய பகீர் விநாடிகள்.. திக் திக் திக் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் பவன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெய்பீம் நகர் பகுதியில், குடியிருப்பு வளாகத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கொடூரமாக மோதி நசுக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த கார் ஒன்று திடீரென அவர்கள் மீது ஏறிச் சென்றுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த ஒட்டுமொத்த விபத்துச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
குடியிருப்புப் பகுதியில் மிக அபாயகரமான முறையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அந்த ஓட்டுநர் மீது, தற்போது வரை எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சமூக வலைதளங்களில் இந்த சிசிடிவி வீடியோவைப் பகிர்ந்து மீரட் மற்றும் உத்தரப் பிரதேச போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்களை அனுப்பி வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தலைமறைவாக உள்ள ஓட்டுநரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
