LATEST NEWS
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கிளைமாக்ஸ் இதுதானா?.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா இருக்கே பா.. அப்போ எண்டு கார்டு கன்ஃபார்ம்..!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு உள்ளது. பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஹிட் கொடுக்கும். அந்த வகையில் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினம்தோறும் இந்த சீரியலை பார்க்கும்போது அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக இந்த சீரியல் அமைந்துள்ளது. அதில் நாளுக்கு நாள் நடைபெறும் சண்டைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்க்கும் போது மனம் நெகிழ செய்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடியப்போகிறது என்று தகவல் பரவி வரும் நிலையில் தற்போது கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்ற தகவல் கசிந்துள்ளது.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இருக்கும் பிரச்சனைகள் சரியாகி வரும் நிலையில் ஜீவாவின் மாமனார் அவரது இரண்டாவது மருமகனால் பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதனால் அவர் பெரிய அளவில் நஷ்டம் ஆகி பணம் இல்லாமல் தவிக்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வந்து உதவி செய்வது போலத்தான் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.