TRENDING
பிக்பாஸ் வீட்டில் வசமாக சிக்கும் போட்டியாளர்…. உப்பு சண்டையை சாடிய கமல்ஹாசன்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். தினம்தோறும் ஏதாவது ஒரு சண்டையுடன் போட்டியாளர்கள் இடையே மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் அரச குடும்பமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. அதில் ரட்சிதாவின் சாப்பாட்டில் ஷிவின் உப்பு போட்ட விவகாரம் மிகப்பெரிய சண்டையாக மாறியது. இதற்காக அஷிம் மற்றும் விக்ரமன் இருவரும் சண்டையிட்டனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வந்துள்ளார். அதில் அவர் போட்டியாளர்கள் போட்ட சண்டை குறித்து பேசி உள்ளார். அதில் கமல்ஹாசன் பேசிய சில வார்த்தைகள் வைத்து பார்க்கும் போது அசீம் வசமாக சிக்க போகிறார் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Day41 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision@preethiIndia @NipponIndia pic.twitter.com/e5VH8FoDqS
— Vijay Television (@vijaytelevision) November 19, 2022