LATEST NEWS
புது வீட்டிற்கு மனைவியுடன் குடிபோக இருக்கும் தனுஷ்….! விரைவில் வெளியாக போகும் நல்ல செய்தி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை என திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக விளங்கி வருகிறார் .தமிழ் நடிகராக மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என்று ஒட்டுமொத்த சினிமாவையும் கலக்கி வருகிறார் . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் இந்த திரைப்படத்தை வெளியிட்டதன் காரணமாக இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது .இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது அடுத்த படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் .அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷின் வாழ்க்கை தற்போது சிக்கலில் உள்ளது.
அதாவது இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் மூழ்கினர். மேலும் இருவரும் விவாகரத்து செய்ய வேண்டாம் என்று பலரும் கேட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரை சமாதானப்படுத்துவதற்கு இவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இதனால் சற்று மனம் இறங்கியுள்ள தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விரைவில் அவர்களின் பிள்ளைகளுக்காக ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் தனுஷ் போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டி வருகிறார்.இந்த வீட்டில் கிரகப்பிரவேசம் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாகவும், இதில் தனது மனைவியுடன் அந்த வீட்டிற்கு பால் காய்ச்ச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே வருகிற ஜனவரி மாதம் இருவரும் தங்களது விவாகரத்து ரத்து செய்தியை அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது .