CINEMA
“அந்த விஷயத்தால்” தி கோட்: Audio Launchக்கு NO சொன்ன விஜய்…? ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படமானது செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு கூட்டங்களை நடத்த வேண்டாம் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.