GALLERY
வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ்.. மனைவி, பிள்ளைகளை பாத்திருக்கீங்களா..? வெளியான கியூட் Family photos..!!

முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற வெற்றி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.
முன்னதாக தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குனர் ராமிடம் உதவியக்குனராக வேலை பார்த்துள்ளார். சில வருடங்கள் பத்திரிகையாளராக வேலை பார்த்துள்ளார்.
முக்கியமாக ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியவர் மாரி செல்வராஜ்.
இவர் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேறு ஒரு படத்தை இயக்க மாரி செல்வராஜ் முடிவு செய்துள்ளார்.
அந்த படத்திற்கு வாழை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஹாட் ஸ்டார் தயாரிப்பு வாழை படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். மாரி செல்வராஜுக்கு திவ்யா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் திவ்யா தனது சமூக வலைதள பக்கத்தில் சில குடும்ப புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title