LATEST NEWS
“வந்துட்டாரு இந்தியன் தாத்தா”… சுதந்திர தினத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் சங்கர்..!!

பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகின்றார். லைகா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியன் 2 அப்டேட் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.
இந்தியன் முதல் பாகத்தில் நாம் பார்த்த அதே இந்தியன் தாத்தா மூவர்ண பலூன்களுக்கு இடையில் நின்றவாறு ஏதோ சதி திட்டம் தீட்டி கொண்டிருப்பது போல ஒரு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கமலை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இளமையாக இந்த திரைப்படத்தில் நாம் பார்க்க இருப்பதாகவும் இதற்காக டி ஏஜிங் என்று சொல்லப்படும் வயதைக் குறிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்த சங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது .
Instagram இல் இந்த இடுகையைக் காண்க