LATEST NEWS
அம்மாடியோ ஒத்த விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?…. நடிகர் ஜெயம் ரவி விளம்பரத்திற்காக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா….?????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் .
இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதனிடையே படங்களில் மட்டுமே நடித்து வரும் ஜெயம் ரவி அவ்வபோது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அவ்வகையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு அவர் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவிக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஒரு படம் முழுவதும் நடிப்பதற்கு குறைவான சம்பளம் வாங்கும் நடிகைகள் இருக்கும் பட்சத்தில் ஐந்து நிமிட ஒரு விளம்பரத்திற்காக இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.