LATEST NEWS
சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் கார், வீடு மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 10 நாளில் 45 கோடி வரை வசூல் செய்தது. இன்றும் பல திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு உருவாக இருக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு,அவர் பயன்படுத்தும் கார் மற்றும் குடியிருக்கும் வீடு குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 15 கோடி இருக்கும் எனவும் சிவகார்த்திகேயன் கருப்பு கலர் ஆடி கார் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் வீட்டின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.