வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பிற்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேலான் ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் நிலையில் இளையராஜா இசையமைக்க உள்ளார். இதில் கதையின் நாயகனாக சூரி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கௌதம் மேனன் நடிக்கின்றார்.

இந்தத் திரைப்படம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக மூன்று கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.