LATEST NEWS
மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக ‘வானத்தைப்போல’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன செஞ்சாங்க தெரியுமா?… பாராட்டும் ரசிகர்கள்…

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘வானத்தைப்போல’. இந்த சீரியல் அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இந்த ‘வானத்தைப்போல’ சீரியலில் பாசமான அண்ணனாக நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீ கணேஷ்.
இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் வானத்தைப்போல சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்காக வானதைப்போல சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை நடிகர் ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இவ்வுலகை விட்டு பிரிந்தார். இதை தற்பொழுது வரை யாராலும் நம்பவும் முடியவில்லை.ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில் இந்த அஞ்சலி வீடியோவானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram