TRENDING
உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடக்காது…. பிக்பாஸ் வீட்டில் அசீமை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்…. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இதனிடையே இந்த வாரம் நிவாசினி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிக் பாஸில் இன்று கமல்ஹாசன் அசிமை வன்மையாக கண்டித்துள்ளார். அசீம் மன்னர் குடும்பம் டாக்கில் படைத்தளபதியாக செயல்பட்டு வந்தபோது சாவியை ஏடிக்கேவிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்க சொல்லி உள்ளார்.
ஆனால் அதனை பாதுகாக்க தவறியதால் ஏடிகேவின் கோபத்தை கிளப்பி அசீம் பிக் பாஸ் வீட்டை ரணகளமாக மாற்றினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கமல்ஹாசன் நீங்கள் நினைப்பது போல அனைத்தும் நடைபெறாது என எனக் கூறி கோபமாக பேசியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.