பிரபல கன்னட நடிகரின் கார் மோதி பெண் பலி… பெங்களூருவில் ஏற்பட்ட பரபரப்பு… போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகர்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல கன்னட நடிகரின் கார் மோதி பெண் பலி… பெங்களூருவில் ஏற்பட்ட பரபரப்பு… போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகர்…

Published

on

கன்னட மொழியில் வெளியான 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நாகபூஷனா. இவர் 2018 இல் சங்கஸ்த கர கணபதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் கௌசல்யா சுப்ரஜா ராமா, டேர்டெவில் முஸ்தபா, படவா ராஸ்கெல், இக்கத் போன்ற படங்களிலும் பணியாற்றினார். திரைப்படத்தில் நடித்ததற்காக நாகபூஷனா சைமா விருதையும் வென்றார்.

இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணி அளவில் பெங்களூருவில் இருக்கும் உத்தரஹள்ளி பகுதியில் இருந்து கொனக்குண்டே பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  இந்த கார் வசந்தபுரம் பகுதியில் செல்லும் போது, நடைபாதையில் கிருஷ்ணா – பிரேமா தம்பதி நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களின் மீது கார் மோதியதில் பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். கார் மின்கம்பத்தில் மோதி நின்றது.

Advertisement

 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  விபத்தில் பிரேமா என்ற மனைவி உயிரிழந்தார். அவரது கணவர் கிரிஷன் பெங்களூரு பன்னர்கட்டா பகுதியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், கன்னட நடிகர் தானே தம்பதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பாதிக்கப்பட்டவரின் மகன் பார்த்தா, நாகபூஷனா மீது போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in