LATEST NEWS
19 மொழிகளில் பாடல்களை பாடிய பிரபல பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்…. திரையுலகிற்கு பேரிழப்பு….!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தன்னுடைய கணவர் மரணத்திற்கு பிறகு அவர் வாழ்ந்த வந்த வீட்டில் தான் இருப்பேன் என பிள்ளைகள் அனைத்தும் செல்லாமல் தனியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கு சமையல் மற்றும் மேற்படி வேலைகளை செய்வதற்கு மலர்க்கொடி என்பவர் கடந்த 10 வருடங்களாக வீட்டில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று 10:30 மணியளவில் மலர்கொடி வீட்டிற்கு சென்று கதவை தட்டிய நிலையில் கதவு திறக்கப்படாததால் உடனே அக்கம் பக்கத்திற்கு விஷயத்தை கூறி பாடகியின் சகோதரருக்கு போன் செய்துள்ளார்.
பிறகு அவரிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறந்த போது வாணி ஜெயராம் தன்னுடைய அறையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.