LATEST NEWS
வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கும் ஜி.பி. முத்து…..! என்ன தலைவரே இப்படி பண்ணிட்டீங்க……!!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஏற்கனவே 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில், தற்போது ஆறாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கடந்த ஐந்து சீசர்களை காட்டிலும் இந்த சீசன் தொடங்கிய முதல் வாரமே விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.இதனால் மக்களுக்கு மிகவும் பிடித்த வகையில் உள்ளது.
அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பிரபலமாகி வருகிறார் ஜி. பி .முத்து. இவருக்கு ஏற்கனவே மக்களிடையே பெருமளவு ஆதரவு இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மேலும் ஆதரவு பெருகி வருகின்றது. இந்த பிக் பாஸ் சீசனில் மக்களை கவர்ந்த போட்டியாளராகவும் இவர் இருந்து வருகிறார்.இந்நிலையில் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சி யிலிருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல நினைத்து வருவதாக பிரம்மோ வெளியானது.
மேலும் கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் சந்தோஷமாக இருப்பதில்லை .அவரது சகோதரர் ஆனந்தை பார்க்க வேண்டும் என்றும், தனது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்றும் அடம் பண்ணிக் கொண்டிருக்கிறார். மேலும் தன்னை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.