CINEMA
தங்கலானுக்கு கிடைத்த வரவேற்பு திக்குமுக்காட வைக்கிறது…. பூரித்த ஜி.வி. பிரகாஷ்

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த திரைப்படம்நேற்று சுமார் 2000 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், பாடல்களும் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ், “ஓ மை காட். தங்கலானுக்கு கிடைத்திருக்கும் அன்பு திக்குமுக்காட வைக்கிறது. என்னுடைய டீமுக்கும். இயக்குநர் பா. ரஞ்சித், விக்ரம் ஆகியோருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.