LATEST NEWS
HAPPY BIRTHDAY குட்டி தல ஊரையே தெறிக்க விட்ட ஒரு போஸ்டர்! தல ரசிகர்கள் அப்டி என்ன அது

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கொண்டவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் கடைசியாக நேர் கொண்ட பார்வை எனும் சமூக நீதி பெண் பாதுகாப்பு படத்தில் நடித்தார். தற்போது இவர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
மறுபக்கம் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இதன் இடையே அஜித் துப்பாக்கி சுடுதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதோடு பயிற்சி, போட்டி என பிசியாக இருக்கிறார். இதுகுறித்த வீடியோ அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்து விட்டது.
அவ்வப்போது அவரின் புகைப்படங்களும், குடும்பத்தினரின் புகைப்படங்களும் ரசிகர்களின் போனில் கிளிக் செய்யப்படுகின்றன.
அஜித்தின் மகன் ஆத்விக்குக்கு நாளை (01.03.2020) பிறந்தநாள். இதனால் மதுரை ரசிகர்கள் பிறந்த நாள் காணும் 2.1K கிட்ஸின் எதிர்காலமே மாண்புமிகு ஆத்விக் அஜித்குமார் என போஸ்டர் வைத்து ஊரையே அசத்தியுள்ளார். இந்த போஸ்டர் ஆனது ஊரையே திரும்பி பார்க்க வைத்து உள்ளது.