LATEST NEWS
கணவரை பிரிந்து வாழும் நடிகை பானுப்பிரியாவின் மகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகை என்பதையும் தாண்டி தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டியுள்ளார். 90களில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அதே சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் தற்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான இவருக்கு அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் பானுப்பிரியா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பானுப்பிரியாவின் மகள் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இது சிறு வயது புகைப்படம் தான். தற்போது அவர் எப்படி உள்ளார் என்ற புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.