LATEST NEWS
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மருமகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண்வாசனை கலந்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அது மட்டுமல்லாமல் 90களில் மிகச் சிறந்த நாயகிகளாக இருந்தவர்கள் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான். பல முன்னணி இயக்குனர்கள் இவரிடம் தான் பாடம் கற்றுக் கொண்டனர். இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களுமே நல்ல கருத்து கதை கரு கொண்ட படங்களாக தான் இருக்கும். இவர் சமீப காலமாக ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனிடையே பாரதிராஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரின் மகன் மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் என்பதை பலரும் அறிந்திருப்போம். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மனோஜ் பாரதிராஜா அவரின் மனைவி நந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.