LATEST NEWS
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத அழகிய புகைப்படம் இதோ….!!!!

திரை நட்சத்திரங்களில் வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வந்தவர் சிவாஜி கணேசன். இவர் நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி மற்றும் சிம்ம குரலோன் என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் இவர்தான். திரை துறையில் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவிலியர் விருதும் பெற்றவர் இவர்தான். தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டு மக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒரு சேர நிறைந்தவர் இவர். தமிழ் சினிமாவில் இன்று வரை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் வெளியான பாசமலர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றவை.
இன்றைய முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் சிவாஜி கணேசன் 1952 ஆம் ஆண்டு கமலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது சிவாஜி கணேசன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.