‘சின்னத்தம்பி”சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை அணிலா ஸ்ரீகுமாரின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?..வைரலாகும் குடும்ப புகைப்படம்.. - Cinefeeds
Connect with us

CINEMA

‘சின்னத்தம்பி”சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை அணிலா ஸ்ரீகுமாரின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?..வைரலாகும் குடும்ப புகைப்படம்..

Published

on

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘சிறகடிக்க ஆசை’. இந்த சீரியலை இயக்குனர்  எஸ் குமரன் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த சீரியலானது ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த சீரியலில் கோமதி பிரியா, வெற்றி வசந்த் ,தமிழ்ச்செல்வி, சத்யா, சங்கீதா, பாரதி போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் முத்துவின் அம்மாவாக விஜயா கதாபாத்திரத்தில் நடிப்பவர்  நடிகை அணிலா ஸ்ரீகுமார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

இவர் தந்தை பீதாம்பரன் தாய் பத்மாவதி. இவருக்கு அனூப் என்ற ஒரு தம்பியும் உள்ளார். இவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார்.அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு வெளியான படம்’சர்கம்’என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து  பரிணயம், சகோரம், கல்யாண்ஜி ,ஆனந்த்ஜி ,பாய்சகோதரர்கள், சாந்தா, சாதாரம், ஆலஞ்சேரி தம்பிரகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைந்த நிலையில் சீரியலில் நடித்து வந்தார்.இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சின்ன தம்பி, காற்றின் மொழி, பாவம் கணேசன் தமிழ் சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ்,தெலுங்கு ,மலையாளம் போன்ற பல மொழி  சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை அணிலா தயாரிப்பாளர் ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அபினவ் மற்றும் ஆதிலெக்ஷ்மி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘ஜோடி நம்பர் 1’.இந்த நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதை தொடர்ந்து MR &MRS சின்னத்திரை சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்டார்.  தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.