LATEST NEWS
“அவர் மனசு வச்சா தான் என் மகனுக்கு திருமணம் நடக்கும்”…. முதல் முறையாக மன வருத்தத்துடன் பேசிய சிம்பு தந்தை டி.ராஜேந்தர்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரின் நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனிடையே சிலம்பரசனை பார்க்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்பதுதான். அண்மையில் அவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாகவும் அதற்காக பெண்பார்த்து வருவதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. இருந்தாலும் சிம்புவின் திருமணம் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து அவரின் தந்தை டி ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, விரைவில் என் மகனுக்கு திருமணம் நடைபெறும், அவனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட என் மனைவி தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் என்னை பார்த்தாலும் என் மகனுக்கு எப்போது திருமணம் என கேள்வி கேட்கிறார்கள், கடவுளின் அருளால் விரைவில் என் மகன் திருமணம் நடைபெறும் என டி. ராஜேந்தர் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.