LATEST NEWS
“உடனே ஓடி வாருங்க..”! பள்ளியில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அரை மணி நேரம் வேடிக்கை பார்த்த பள்ளி நிர்வாகம்.. கதறும் பெற்றோர்..!!
மும்பையின் பிரபல தனியார் பள்ளியான தாக்கூர் இண்டர்நேஷனல் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம், பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது. ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து சிறுமியின் தாயாருக்கு அவசர அழைப்பு ஒன்று வருகிறது. “உடனே பள்ளிக்கு வாருங்கள்” என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். பதறியடித்துக்கொண்டு கிளம்பிய தாயாருக்கு, வழிநெடுகிலும் “சீக்கிரம் வாருங்கள், குழந்தை உங்களைத்தான் கூப்பிடுகிறது” என மீண்டும் மீண்டும் வந்த போன்கால் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்கு ஓடோடி வந்த தாயார், இரண்டாவது தளத்தில் தனது மகள் கதறி அழும் சத்தம் கேட்டு அங்கே விரைந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி அவரது நெஞ்சையே பதற வைத்தது. சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடக்க, சுற்றிலும் ஆசிரியர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கதவை மூடும்போது சிறுமியின் விரல் கதவின் நடுவே சிக்கித் துண்டானதாகவும், அதனால் தான் ரத்தம் கொட்டுவதாகவும் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதையடுத்துச் சிறுமி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்ததும் தெரியவந்தது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தால் துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் பொருத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், அதிக ரத்தப்போக்கு காரணமாகச் சிறுமியின் உயிருக்கே ஆபத்தான சூழல் உருவானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்தனர். பழைய சம்பவமாக இருந்தாலும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் எந்தளவிற்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், பள்ளி நிர்வாகத்தின் சிறு அலட்சியம் ஒரு குழந்தையின் வாழ்வையே எப்படிப் பாதிக்கும் என்பதையும் உணர்த்தும் எச்சரிக்கையாக இது அமைந்திருக்கிறது.
