விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதனிடையே பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல் நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் இன்டர்வியூ மட்டும் தொகுத்து வழங்கி வரும் இவர் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இதனிடையே டிடிக்கு ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் படிக்க மிகவும் ஆசையாம். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஆக்ஸ்போர்ட் இடத்தில் நிற்பது தனது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க