LATEST NEWS
தனி தீவில் அந்த நடிகருடன் நான் இருக்க வேண்டும்…. அதுவும் அப்படி…. நடிகை ஜனனி ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜனனி ஐயர். இவர் பாலாவின் அவன் இவன் திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் திரு திரு திரு திரு மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாகன், அதே கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழ் சினிமாவில் பார்க்கும்போது குடும்ப குத்து விளக்கு போல காணப்படும் நடிகைகளில் ஒருவர் தான் ஜனனி ஐயர். தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு மார்க்கெட் குறைவு தான். இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது சில படங்களில் நடிப்பதற்கு இவர் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் தனித்தீவில் சிக்கிக் கொண்டால் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜனனி, என் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க துருவ் விக்ரம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.