#image_title

தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை அவர் வெளியிட்டார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். திருமணமான பிறகும் கிளாமர் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Pranita Subhash இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pranitha.insta)