அடடே இயக்குனர் ஷங்கரின் மகனா இது?…. ஹீரோ போல நன்றாக வளர்ந்து விட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே இயக்குனர் ஷங்கரின் மகனா இது?…. ஹீரோ போல நன்றாக வளர்ந்து விட்டாரே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் சங்கர். இவர் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே தொழில்நுட்ப நுண்ணறிவு, பிரம்மாண்டம் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு கொண்ட படங்களாகவே அமைந்துள்ளன. இவர் முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. இதுவரை 13 திரைப்படங்களை சங்கர் இயக்கியுள்ளார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து மக்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரின் இளைய மகள் அதிதி விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் மூத்த மகளுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் சங்கர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் சங்கரின் மகன் புகைப்படத்தை பார்த்த பலரும் அட சங்கரின் மகனா இவர் நன்றாக வளர்ந்து விட்டாரே எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aditi Shankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aditishankarofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in