“அவங்க மனுஷங்களே இல்ல, வாழத் தகுதியற்றவர்கள்” தினமும் 40 பேரைக் கொல்லுங்க… இஸ்ரேல் அமைச்சர் போட்ட கொடூர பிளான்… அலறும் காஸா மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவங்க மனுஷங்களே இல்ல, வாழத் தகுதியற்றவர்கள்” தினமும் 40 பேரைக் கொல்லுங்க… இஸ்ரேல் அமைச்சர் போட்ட கொடூர பிளான்… அலறும் காஸா மக்கள்..!!

Published

on

காசாவில் தினமும் 30 முதல் 40 பாலஸ்தீனர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இலக்கு நிர்ணயித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரோம் பிராஸ்லாவ்ஸ்கி என்பவருடனான பாட்காஸ்ட் (Podcast) உரையாடலில் அவர் இந்தத் தீவிரமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்களுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லாத நபர்களையும் இலக்கு வைத்து தினமும் இரவில் இத்தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனர்களை “அவர்கள் மனிதர்களே அல்ல, வாழத் தகுதியற்றவர்கள்” என மிகக் கொடூரமாக விமர்சித்துள்ள அவர், இந்த இலக்கை அடைவதற்காக உலகத்தையே தலைகீழாக மாற்றவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், முழு காசாவையும் இஸ்ரேலுக்கே சொந்தமானதாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள பென் க்விர், அங்கு யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை அங்கிருந்து முற்றிலும் வெளியேற்றி வேறு நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும், தீவிரவாதிகளை ஒவ்வொன்றாகக் கொன்றழிக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளது தற்பொழுது உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in