LATEST NEWS
“நான் கேட்டேன், அவர் கொடுத்துடாரு”.. ஜெயிலர் பட நடிகர் ஜாபருக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. என்னனு நீங்களே பாருங்க..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருக்கும் மாஸ் ஹீரோக்களுடன் துணை வேடங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர்தான் ஜாபர். சிவராஜ்குமார் உடன் இருக்கும் அடியாட்களில் இவரும் ஒருவர்.
இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருந்தார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் பாவ கதைகள் என்ற வெப் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதலில் நடித்தார். அதன் பிறகு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.
இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ள நிலையில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் பயன்படுத்திய கூலிங் கிளாசை கிப்டாக ஜாபருக்கு கொடுத்துள்ளார். நான் கேட்டேன் அவர் கொடுத்தார் என்று ஜாபர் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க