LATEST NEWS
ரஜினியின் ஜெயிலர் படத்தில் வேற லெவலில் மியூசிக் போட்டு மாஸ் காட்டி அனிருத்.. எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அனிருத் இசையமைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ரஜினியுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த ரம்யா கிருஷ்ணன், தமன்னா மற்றும் யோகி பாபு என பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக உலக அளவில் 525 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு நெல்சன் பங்களிப்பு எவ்வளவு காரணமோ அந்த அளவு படம் வெற்றி பெற அனிருத் பாடல்களும் மற்றும் பின்னணி இசையும் காரணமாகும். ரஜினிக்காக நெல்சன் வைத்த பல காட்சிகளையும் தன்னுடைய பின்னணி இசையின் மூலம் அனிருத் மாசாக காட்டியுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் அனிருத் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.