LATEST NEWS
பிரபல தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்.. போனி கபூரின் ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆகுமா..? பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் புதிய அப்டேட்..!!

பிரபல நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.
மேலும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹிந்தியில் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹரா இயக்கத்தில் மகாபாரத கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து உள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல கதாநாயகி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 15 -ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போனி கபூர் தனது மகளை முதலில் தமிழில் அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில் ஹிந்தியில் அதுவும் சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.