காதல் பறவைகளாக வெளிநாட்டில் சுற்றும் கார்த்திக் – மஞ்சிமா ஜோடி….! கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் அழகா மாறிட்டீங்களே…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காதல் பறவைகளாக வெளிநாட்டில் சுற்றும் கார்த்திக் – மஞ்சிமா ஜோடி….! கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் அழகா மாறிட்டீங்களே…!

Published

on

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிரூபிக்க போராடி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து தற்பொழுது கௌதம் கார்த்திக் சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வந்தார். இதனை அதிகாரபூர்வமாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை நவம்பர் 28 ல் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது  திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. இவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு இனிமையான தருணங்களையும் இணையத்தில் புகைப்படங்களாக பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை மஞ்சிமா உடல் எடையை குறைத்த ஸ்லிம் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் தற்பொழுது தனது கணவருடன் ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Tamilan Media (@tamilan_media_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement