LATEST NEWS
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய லோகேஷ்… காலில் காயத்துடன் திரும்பிய நிகழ்வு… கேரளாவில் மாஸ் காட்டும் லியோ…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. லியோ தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள நிலையில், கேரளாவிலும் இப்படம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இப்படமானது வெளியான நாளன்று கேரளாவின் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
லியோ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செவ்வாய்கிழமையான நேற்று கேரளாவிலுள்ள அரோமா திரையரங்கிற்கு சென்று அங்குள்ள செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். ஆகையால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருவார் என்ற செய்தி பரவியதின் காரணமாக, பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டர் வளாகத்தில் அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதனால் கூட்ட நெரிசலில் சிக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனடிப்படையில் லோகேஷ் கனகராஜ் கேரளாவில் கலந்து கொள்ள இருந்த மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு தமிழகம் திரும்பினார்.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அரோமா சினிமாஸில் எடுக்கப்பட்ட செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். அதில், கூச்சலிட்டு ஆரவாரம் செய்யும் நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்கள் மத்தியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நிற்பது போன்ற புகை படத்தினை பதிவிட்டு இருந்தார். இது குறித்து மேலும் பதிவிட்ட லோகேஷ் கனகராஜ், “உங்கள் அன்புக்கு நன்றி கேரளா.. பாலக்காட்டில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி. ❤️,” என்று குறிப்பிட்டு இருந்தார் .
மேலும், “கூட்டத்தில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக, மற்ற இரண்டு இடங்களுக்கும், செய்தியாளர் சந்திப்புக்கும் என்னால் செல்ல முடியவில்லை. நான் நிச்சயமாக உங்கள் அனைவரையும் கேரளாவில் மீண்டும் சந்திக்க வருவேன். அதுவரை இதே அன்புடன் லியோவை ரசித்துக் கொண்டே இருங்கள்” என்றார் தெரிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் திருச்சூரில் உள்ள ராகம் தியேட்டர் மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள கவிதா தியேட்டர் மற்றும் மாலை கொச்சியில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வரவிருந்தார். ஆனால் பாலக்காட்டில் உள்ள அரோமா தியேட்டரில் ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி லேசான காயம் அடைந்த அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கேரளா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#LokeshKanagaraj thanking the Kerala audience for their humongous support for #LEO in Palakkad. #LeoBlockbuster pic.twitter.com/FL6VmydoIL
— Ajay AJ (@AjayTweets07) October 24, 2023