LATEST NEWS
ரிலீசுக்கு முன்பே கண்டிஷன் போட்ட Netflix… புதிய வெர்ஷனில் வெளியாகும் லியோ.. ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தன்னுடைய திரை பயணத்தில் குறுகிய காலத்தில் ஒரு அபாரமான வளர்ச்சியை பெற்றுள்ளார். இறுதியாக இவர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
உலக அளவில் சுமார் 612 கோடி லியோ திரைப்படம் வசூல் செய்தது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் வசூலில் கிளியோ திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் டிசம்பர் 21ஆம் தேதி நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளது.
அதாவது இந்த படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட netflix நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆங்கில சப் டைட்டிலில் மட்டுமல்லாமல் ஆங்கில மொழியிலேயே படம் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஆங்கிலம் பேசும் திசையை இதில் காணலாம். இவருக்கு யார் டப்பிங் கொடுப்பார்கள் அவரது உச்சரிப்பு எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை வாங்கும் போதே இதற்கான ஒப்பந்தத்தில் தயாரிப்பு தரப்பு கையெழுத்திட்டு அதன் பிறகு மிகப்பெரிய வியாபாரத்தில் நெட்பிலிக்ஸ் செய்த திரைப்படத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.