LATEST NEWS
பிரபல மலையாள நடிகை திடீர் தற்கொலை.. காரணம் என்ன?… ரசிகர்கள் ஷாக்..!!

கேரளாவில் மிகவும் பிரபல நடிகையான அபர்ணா கல்கி, முத்துகவ், மேகத்தீரதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைப் போலவே தமிழிலும் அட்டகத்தி மற்றும் மைதிலி வேண்டும் வரம் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் 33 வயதாகும் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு 7.30 மணி அளவில் தாயார் மற்றும் சகோதரி வீட்டில் இருந்த நிலையில் திடீரென அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபர்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திவரும் நிலையில் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக தகவல் வெளியாகி உள்ளது.